தமிழ் வேற்றுமை யின் அர்த்தம்

வேற்றுமை

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்று மற்றொன்றிலிருந்து அல்லது ஒருவர் மற்றொருவரிலிருந்து மாறுபட்டு அல்லது வேறுபட்டுக் காணப்படும் தன்மை; வித்தியாசம்.

  ‘இந்த இரு பண்பாடுகளுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் என்ன?’
  ‘‘க’ என்ற எழுத்துக்கும் ‘க்’ என்ற எழுத்துக்கும் உள்ள வேற்றுமை என்ன?’
  ‘நண்பர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் பிரிந்துவிட்டார்கள்’
  ‘கர்நாடக சங்கீதத்துக்கும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பாடகர் மிக அழகாக விளக்கினார்’

 • 2

  இலக்கணம்
  (வாக்கியத்தில்) பெயருக்கும் வினைக்கும் அல்லது இரண்டு பெயர்களுக்கு இடையே உள்ள உறவைக் காட்டுவது.

 • 3

  பாகுபாடு.

  ‘திருவிழாவுக்காக ஊர் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராட்டாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள்’