வேறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வேறு1வேறு2வேறு3

வேறு1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (மற்றொன்றிலிருந்து பிரித்து) தனித்து அறியப்படுவது.

  ‘அது வேறு ஊர்; இது வேறு ஊர்’
  ‘ஊடல் வேறு; சண்டை வேறு’
  ‘ஒரே வெட்டில் ஆட்டின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் போய்விட்டது’
  ‘ஒவ்வொருவருடைய அணுகுமுறையும் ஏன் வேறாக இருக்கிறது’
  ‘இந்தச் செய்யுளுக்கு முற்றிலும் வேறான பொருளை உரையாசிரியர் கூறுகிறார்’

வேறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வேறு1வேறு2வேறு3

வேறு2

பெயரடை

 • 1

  கூறப்படுவது அல்லது கூறப்படுபவர் அல்லாமல்.

  ‘உன்னை விட்டால் எனக்கு உதவி செய்ய வேறு யார் இருக்கிறார்கள்?’
  ‘எனக்கு இந்த வேலையைத் தவிர வேறு எதுவும் தெரியாது’
  ‘வேறு வழி இல்லையா?’

வேறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வேறு1வேறு2வேறு3

வேறு3

இடைச்சொல்

 • 1

  ‘கூடுதலாக’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘மேலும்’.

  ‘சமையல் வேலை இன்னும் முடியவில்லை, மணி வேறு எட்டாகிவிட்டது’