தமிழ் வேலைசெய் யின் அர்த்தம்
வேலைசெய்
வினைச்சொல்
- 1
(இயந்திரம் முதலியவை) இயங்குதல்.
‘கணிப்பொறி வேலை செய்யும் விதத்தைப் பற்றி எளிய தமிழில் அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்’‘மூன்று நாட்களாகத் தொலைபேசி வேலைசெய்யவில்லை’ - 2
(மருந்து போன்றவை) குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துதல் அல்லது பலனைத் தருதல்.
‘அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்த மருந்து இப்போதுதான் வேலைசெய்ய ஆரம்பித்திருக்கிறது’