தமிழ் வேளை யின் அர்த்தம்

வேளை

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட) நேரம்; சமயம்.

  ‘குழந்தை பிறந்த வேளை வீட்டில் சுப காரியங்கள் நடந்தன’
  ‘மும்முரமாக ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது’
  ‘உரிய வேளை வரும்போது நான் உனக்கு நிச்சயம் உதவி செய்வேன்’

 • 2

  ஒரு நாளில் காலை, மாலை, மதியம், இரவு என்று பிரிக்கப்பட்ட பொழுது.

  ‘இந்த மாடு வேளைக்கு எட்டு லிட்டர் பால் கறக்கும்’
  ‘காலையிலும் மதியத்திலும் இரவிலும் வேளைக்கு அரை மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்’
  ‘பகல் வேளைகளில் திருட்டு குறைவாக இருக்கிறது’
  ‘மாலை வேளைதான் சற்று ஓய்வாக இருக்க முடியும்’
  ‘பாட்டி இரண்டு வேளையும் சுவாமிக்கு விளக்கேற்றி வைப்பாள்’
  ‘கிருத்திகை என்றால் அம்மா ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவாள்’