தமிழ் வைத்து யின் அர்த்தம்

வைத்து

இடைச்சொல்

 • 1

  பேச்சு வழக்கு ‘(ஒருவரை) கருவியாக அல்லது (ஒன்றை) காரணமாகப் பயன்படுத்தி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இவனை வைத்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன்’
  ‘நீ செய்த தப்பை வைத்து உன்னை வேலையிலிருந்து நிறுத்திவிட முடியும்’

 • 2

  பேச்சு வழக்கு ‘(சாதாரணமாக அறிந்திருக்க வேண்டியதையும் அறிந்திராத நிலையில்) முறையாகப் பயன்படுத்தி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கண்ணை வைத்துப் பார், காலடியில் கம்பு கிடப்பது தெரியும்’
  ‘காதை வைத்துக் கேள்’

 • 3

  பேச்சு வழக்கு, வட்டார வழக்கு (இடவேற்றுமை -இல் என்பதன் பின்) ஒருவரைக் குறிப்பிடும் இடத்தோடு தொடர்புபடுத்திக் கூறப் பயன்படும் இடைச்சொல்.

  ‘அவரை மதுரையில் வைத்துப் பார்த்தேன்’
  ‘நீங்கள் என்னைப் பஞ்சாயத்தில் வைத்துக் கேட்டாலும் சரி, கோயிலில் வைத்துக் கேட்டாலும் சரி, என்பதில் இதுதான்’