தமிழ் வைத்துக்கொள் யின் அர்த்தம்

வைத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (ஒரு கருத்தை நிறுவுவதற்கு முதல் படியாக இன்னொரு கருத்தை) அனுமானமாகக் கொள்ளுதல்.

  ‘அவர் சொன்னது உனக்குப் புரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம்’
  ‘தண்ணீரே இல்லை என்று வைத்துக்கொண்டால், அப்போது என்ன மாற்று ஏற்பாடு செய்யவேண்டியிருக்கும்?’

தமிழ் வைத்துக்கொள் யின் அர்த்தம்

வைத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (பொறுப்பாக அல்லது கவனமாக) கவனித்துக்கொள்ளுதல்; பராமரித்தல்.

  ‘அவர் என்னை நன்றாகத்தான் வைத்துக்கொண்டார்’
  ‘நான் புதிதாக வாங்கித் தரும் பேனாவையாவது ஒழுங்காக வைத்துக்கொள்’