வைரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வைரி1வைரி2

வைரி1

வினைச்சொல்வைரிக்க, வைரித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (மரத்தில்) வைரம்பாய்தல்.

  ‘தேக்கு மரம் இன்னும் வைரிக்கவில்லை’
  ‘அவனது கோடாலி எந்த வைரித்த மரத்தையும் ஒருகை பார்த்துவிடும்’
  உரு வழக்கு ‘அவனுக்கு வைரித்த மனம்’

வைரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வைரி1வைரி2

வைரி2

பெயர்ச்சொல்

 • 1

  (எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியாத) பரம எதிரி; பகைவன்.

  ‘‘அரசே! உங்களுடைய வைரி மாண்டான் என்ற செய்தியுடன் போர்க்களத்திலிருந்து திரும்பி வருவேன்’ என்றார் தளபதி வீரசிங்கம்’
  உரு வழக்கு ‘மூடநம்பிக்கைகளின் பரம வைரி அவர்’