தமிழ் ஸ்தானம் யின் அர்த்தம்

ஸ்தானம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு இலக்கம்.

  ‘மூன்று ஸ்தான எண்’

 • 2

  அருகிவரும் வழக்கு (உறவு போன்றவற்றைக் குறித்து வரும்போது) நிலை; இடம்.

  ‘தகப்பனார் ஸ்தானத்திலிருந்து அவர் என் கல்யாணத்தை நடத்திவைத்தார்’

 • 3

  அருகிவரும் வழக்கு வேலை; பணியிடம்; பதவி.

  ‘உதவி ஆசிரியர் ஸ்தானம்’

 • 4

  சோதிடம்
  அருகிவரும் வழக்கு (லக்னத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து ஒரு கிரகம் இருக்கும்) இடம்.

  ‘வாக்கு ஸ்தானம்’
  ‘புத்திர ஸ்தானம்’
  ‘களத்திர ஸ்தானம்’