தமிழ் ஸ்தாபி யின் அர்த்தம்

ஸ்தாபி

வினைச்சொல்ஸ்தாபிக்க, ஸ்தாபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கட்சி, அமைப்பு போன்றவற்றை) நிறுவுதல்; ஏற்படுத்துதல்.

    ‘இந்த நிறுவனத்தை ஸ்தாபித்தவர் அண்மையில் காலமானார்’

  • 2

    அருகிவரும் வழக்கு (ஒரு கருத்தைத் தக்க ஆதாரங்களுடன்) நிலைநாட்டுதல்; நிறுவுதல்.

    ‘தன் கருத்தை ஸ்தாபிக்கப் பெரும் முயற்சி செய்தார்’