தமிழ் ஸ்திரப்படுத்து யின் அர்த்தம்

ஸ்திரப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நிலைக்கச் செய்தல்.

    ‘தந்தை விட்டுச் சென்ற சொத்துகளை ஸ்திரப்படுத்திக்கொள்ள அவர் நீதிமன்றம் செல்ல வேண்டியதாயிற்று’
    ‘கட்சியில் தன் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள அந்த இளம் தலைவர் போராடிக்கொண்டிருக்கிறார்’