தமிழ் ஸ்தம்பி யின் அர்த்தம்

ஸ்தம்பி

வினைச்சொல்ஸ்தம்பிக்க, ஸ்தம்பித்து

 • 1

  (ஒன்றின் இயக்கம் முற்றிலும்) தடைப்படுதல்; நிற்றல்.

  ‘வேலைநிறுத்தத்தின் காரணமாக மாமூல் வாழ்க்கை ஸ்தம்பித்துவிட்டது’
  ‘நூல் விலை ஏற்றத்தால் கைத்தறி நெசவு ஸ்தம்பித்தது’
  ‘விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது’

 • 2

  (அதிர்ச்சியில்) செயலிழந்துபோதல்.

  ‘தலைவர் இறந்த செய்தி அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது’