தமிழ் ஸ்தூலம் யின் அர்த்தம்

ஸ்தூலம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (உடல்) பருமன்.

  ‘அவளுக்கு ஸ்தூல சரீரம்’

 • 2

  அருகிவரும் வழக்கு கண்ணால் காணக்கூடியது.

  ‘‘ஸ்தூல சரீரம்’ என்பது நம் உடலையும் ‘சூட்சும சரீரம்’ என்பது நம் ஆன்மாவையும் குறிக்கும்’
  ‘தெருக்கூத்தில் மேடை அமைப்புகள் ஸ்தூலமாக இல்லாமல் நடிகர்களின் நடிப்பின் மூலமாகவும் பார்வையாளர்களின் கற்பனைமூலமாகவும் உருவாக்கப்படுகின்றன’

 • 3

  அருகிவரும் வழக்கு சூட்சுமமாகவும் அருவமாகவும் இல்லாமல் அறியக்கூடிய வகையில் இருப்பது.

  ‘இருத்தலியலுக்கு ஸ்தூல வடிவம் கொடுத்த ஆக்கங்களாக காம்யு, சார்த்தர் போன்றோரின் படைப்புகள் கருதப்படுகின்றன’
  ‘சொல்லின் ஸ்தூல அர்த்தத்தைத் தாண்டி இருப்பது கவிதை’