தமிழ் -அகம் யின் அர்த்தம்

-அகம்

இடைச்சொல்

 • 1

  ‘ஒரு தொழில், பணி முதலியவை நடைபெறும் இடம்’ என்ற பொருளிலோ ‘குறிப்பிடப்படுபவர் பணியை நடத்தும் இடம்’ என்ற பொருளிலோ ‘நிலப்பகுதி’ என்ற பொருளிலோ ஒரு சொல்லுடன் சேர்ந்து மற்றொரு சொல்லை உருவாக்கும் இடைச்சொல்.

  ‘தையலகம்’
  ‘உணவகம்’
  ‘இயக்குநரகம்’
  ‘தென்னகம்’
  ‘மலையகம்’

 • 2

  வீட்டிற்கோ கட்டடத்திற்கோ பெயர் சூட்டும்போது ‘குறிப்பிட்ட தன்மை நிறைந்திருக்கும் இடம் அல்லது குறிப்பிட்டவர் நினைவாக அமையும் இடம்’ என்ற பொருளில் ஒரு சொல்லுடன் சேர்ந்து மற்றொரு சொல்லை உருவாக்கும் இடைச்சொல்.

  ‘அன்பகம்’
  ‘எழிலகம்’
  ‘வள்ளுவரகம்’