தமிழ் -ஆன யின் அர்த்தம்

-ஆன

இடைச்சொல்

 • 1

  ஒரு பெயர்ச்சொல்லைப் பெயரடை ஆக்கும் இடைச்சொல்.

  ‘அழகான வீடு’
  ‘கடுமையான காய்ச்சல்’
  ‘விரிவான விளக்கம்’
  ‘பண்பான மனிதர்’

 • 2

  ஒரு வரையறையையும் அது குறிப்பிடும் பொருளையும் தொடர்புபடுத்தி ஒரு தொடரை உருவாக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்; ஆகிய.

  ‘நாங்கள் வழிபடும் ஆண்டவனான முருகன்’
  ‘கெட்டிக்காரனான என் நண்பன் முகம்மது இப்ராஹிம்’
  ‘பெரிய கண்களை உடையதும் இரவில் இரை தேடுவதுமான பறவை’

 • 3

  இரண்டு பொருள்களை அல்லது நபர்களை ஒப்பிடும்போது ‘இடையில் உள்ள’ என்ற பொருளில் வாக்கியத்தின் இரண்டு பகுதிகளைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்’
  ‘என் கணவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம்தான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்’