தமிழ் -ஆர யின் அர்த்தம்

-ஆர

இடைச்சொல்

  • 1

    உடல் உறுப்புகளைக் குறிக்கும் வயிறு, காது அல்லது மனம், நெஞ்சம் முதலிய பெயர்ச்சொற்களுடன் இணைந்து ‘நிறைவு, அமைதி, இன்பம் அடையும்படி’ என்னும் பொருளை உணர்த்துவதற்கு அவற்றை வினையடையாக மாற்றும் இடைச்சொல்.

    ‘வயிறாரச் சாப்பிட்டான்’
    ‘மனதாரப் பாராட்டினார்’
    ‘வாயாரப் புகழ்ந்தார்’