தமிழ் -ஆளர் யின் அர்த்தம்

-ஆளர்

இடைச்சொல்

 • 1

  ‘குறிப்பிடப்படும் இயல்பை, தன்மையை உடையவர்’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கும் இடைச்சொல்.

  ‘பண்பாளர்’
  ‘அருளாளர்’

 • 2

  ‘குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்’ அல்லது ‘தரப்பட்டிருக்கும் பொறுப்பைச் செயல்படுத்துபவர்’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கும் இடைச்சொல்.

  ‘களப்பணியாளர்’
  ‘உதவியாளர்’

 • 3

  ‘தேர்ச்சி பெற்றவர், வல்லுநர்’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கும் இடைச்சொல்.

  ‘கல்வியாளர்’
  ‘சமூகவியலாளர்’
  ‘இயற்பியலாளர்’