தமிழ் -இயல் யின் அர்த்தம்

-இயல்

இடைச்சொல்

 • 1

  ஒன்று நடந்துவரும் முறை அல்லது ஒன்றின் இயல்பு என்பதைக் குறிப்பிட ஒரு பெயர்ச்சொல்லோடு சேர்ந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘உலகியல்’
  ‘இல்லறவியல்’

 • 2

  குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான துறை என்பதைக் குறிப்பிட ஒரு பெயர்ச்சொல்லோடு சேர்ந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘மனையியல்’
  ‘மொழியியல்’