தமிழ் -இருந்து யின் அர்த்தம்

-இருந்து

இடைச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  இட வேற்றுமை உருபோடு இணைந்து நீக்கம், தொடக்கம் முதலிய தொடர்பை உணர்த்தும் வேற்றுமை உருபாகப் பயன்படும் இடைச்சொல்.

  ‘நான் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை’
  ‘நூறு ரூபாயிலிருந்து ஏலம் கேட்கத் தொடங்கினார்கள்’
  ‘மதுரையிலிருந்து வருகிறார்’
  ‘கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது’
  ‘கோவிலை இடமிருந்து வலமாகச் சுற்றுவதுதான் முறை’
  ‘அவன் அங்கிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரம் இருக்கும்’
  ‘பலகை மேலேயிருந்து விழுந்தது’
  ‘அவரிடமிருந்து எனக்குத் தகவல் வந்தது’