தமிழ் -உடன் யின் அர்த்தம்

-உடன்

இடைச்சொல்

 • 1

  இறந்தகாலப் பெயரெச்சத்தோடு சேர்ந்து ‘(செயல் நிகழ்ந்த) மறுநிமிடம்’ என்னும் பொருள் தரும் இடைச்சொல்.

  ‘காலையில் எழுந்தவுடன் அப்பா வயலுக்குச் சென்றுவிடுவார்’
  ‘என்னைக் கண்டவுடன் அவன் ஓடத் தொடங்கினான்’
  ‘குழந்தை தூங்கியவுடன் சாப்பிடலாம்’

 • 2

  ‘குறிப்பிடப்பட்டுள்ளதோடு’ என்னும் பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘கூடவே’.

  ‘தாய்ப் பசுவுடன் கன்றும் புல் மேய்கிறது’

 • 3

  ஒரு பெயர்ச்சொல்லை வினையடையாக்கும் இடைச்சொல்.

  ‘அவன் பயத்துடன் நின்றிருந்தான்’

 • 4

  ஒரு செயலில் ஒன்றுக்கு மேற்பட்டவை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு அல்லது அவர்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது என்பதைக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘சற்றுமுன் நீ யாருடன் பேசிக்கொண்டிருந்தாய்?’