தமிழ் -ஏன் யின் அர்த்தம்

-ஏன்

இடைச்சொல்

 • 1

  ‘செய்’ என்னும் ஏவல் வடிவத்தில் கூறப்பட்டாலும் அதைக் கேட்பவர் அதைச் செய்வது நிச்சயமில்லை என்ற தொனியை உணர்த்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘அவனோடு பேசிப்பாருங்களேன்’
  ‘இந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிடேன்’
  ‘நீயும் கதை எழுதேன்’

 • 2

  ‘தொல்லை தரும் செயலையும் அதன் விளைவையும் தவிர்த்திருக்கலாம்’ என்பதை உணர்த்துவதற்கு வாக்கியத்தின் இரு வினைச்சொற்களிலும் இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘இந்த வேலையைச் செய்வானேன், வாங்கிக்கட்டிக்கொள்வானேன்!’
  ‘குழந்தையை அடிப்பானேன், அப்புறம் வருத்தப்படுவானேன்!’

 • 3

  ஒன்றை அல்லது ஒருவரைக் குறித்துச் சொல்லப்படுவது மற்றொன்றுக்கும் அல்லது மற்றொருவருக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவிக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘இந்த ஆண்டு ஐரோப்பாவில் கோடை வெப்பம் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது. அவ்வளவு தூரம் போவானேன், சென்னையிலேயே இதுவரை இந்த அளவுக்கு வெப்பம் கடுமையாக இருந்ததில்லை’
  ‘எல்லோரும் தொலைக்காட்சித் தொடர் என்று பைத்தியமாக அலைகிறார்கள். மற்றவர்களைச் சொல்வானேன், நம் வீட்டிலும் இதே கதைதான்’