தமிழ் -ஏற்ப யின் அர்த்தம்

-ஏற்ப

இடைச்சொல்

  • 1

    நான்காம் வேற்றுமை உருபு ஏற்ற பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்பட்டு ‘தகுந்த’, ‘தகுந்தபடி’ என்னும் பொருளைத் தரும் இடைச்சொல்.

    ‘புதிய தொழில்நுட்பத்திற்கேற்பப் பயிற்சி பெறுவது அவசியம்’
    ‘அவள் சொல்வதற்கேற்ப இவனும் ஆடுகிறான்’
    ‘இசைக்கேற்ப அங்க அசைவுகள் இருக்க வேண்டும்’