தமிழ் -கரம் யின் அர்த்தம்

-கரம்

இடைச்சொல்

 • 1

  பெரும்பாலும் (சமஸ்கிருத) பெயர்ச்சொற்களோடு சேர்க்கப்படுவதும் ‘அளிப்பது’ அல்லது ‘செய்வது’ என்ற பொருள்படுவதும், ஒரு பெயர்ச்சொல்லிலிருந்து மற்றொரு (வேற்றுமை உருபோ பன்மை விகுதியோ ஏற்காத) பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படுவதுமான இடைச்சொல்.

  ‘விழா ஏற்பாடுகள் திருப்திகரமாக இருந்தன’
  ‘மங்களகரமான காரியம்’

 • 2

  சுட்டும் முறையாக உயிர் எழுத்திலும் உயிர்மெய் எழுத்திலும் குறில் எழுத்துகளோடு சேர்க்கப்படும் இடைச்சொல்.

  ‘சிலர் ழகரத்தை ளகரமாக உச்சரிக்கிறார்கள்’