தமிழ் -கள் யின் அர்த்தம்

-கள்

இடைச்சொல்

 • 1

  ஒருமையில் உள்ள எண்ணப்படக்கூடிய பெயர்ச்சொற்களைப் பன்மையாக்கும் இடைச்சொல்.

  ‘புத்தகங்கள்’
  ‘மாடுகள்’
  ‘குழந்தைகள்’
  ‘வண்ணங்கள்’
  ‘சுவைகள்’
  ‘ஆடுமாடுகள்’
  ‘பாத்திரபண்டங்கள்’
  ‘சேர சோழ பாண்டியர்கள்’
  ‘நன்றிகள்’
  ‘வாழ்த்துகள்’
  ‘எண்ண ஓட்டங்கள்’
  ‘மாணவர்கள் வருகிறார்கள்’

 • 2

  0 முதல் 9வரை உள்ள எண்களைக் குறிக்க ‘இருபது’, ‘முப்பது’ போன்ற எண்ணுப்பெயர்களோடு இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘1930களில் சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது’
  ‘டெண்டுல்கர் பலமுறை 90களில் ஆட்டம் இழந்திருக்கிறார்’
  ‘அவர் தன்னுடைய 80களிலும் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்’

 • 3

  ‘குறிப்பிடப்படும் ஒவ்வொரு கிழமையிலும்’ என்ற பொருளைத் தருவதற்குக் கிழமையைக் குறிக்கும் சொல்லோடு இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அவர் வீட்டில் இருப்பார்’
  ‘நான் வெள்ளிக்கிழமைகளை ஆசிரமப் பணிகளுக்காக ஒதுக்கிவைத்திருக்கிறேன்’