தமிழ் -படி யின் அர்த்தம்

-படி

இடைச்சொல்

 • 1

  ஒரு பெயர்ச்சொல்லுடன் இணைந்து ‘கூறப்படும் ஒன்றின் அடிப்படையில் அல்லது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு’ என்ற பொருளில் வினையடை ஆக்கும் இடைச்சொல்.

  ‘அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’
  ‘இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கூடியிருக்கிறது’
  ‘அறிவுரை கூறுவது எளிது. அதன்படி நடப்பதுதான் சிரமம்’

 • 2

  ‘(முன் குறிப்பிட்ட) வகையில்’ என்ற பொருளில் பெயர்ச்சொல்லுடன் இணைந்து வினையடை ஆக்கும் இடைச்சொல்; ‘வண்ணம்’; ‘-ஆறு’.

  ‘நான் சொன்னபடி செய்’
  ‘நடக்கிறபடி நடக்கட்டும்’
  ‘அவர் பேச்சு அனைவரையும் கவரும்படி இருந்தது’