தமிழ் -பூர்வம் யின் அர்த்தம்

-பூர்வம்

இடைச்சொல்

 • 1

  ‘குறிப்பிடும் ஒன்று நிறைந்த தன்மை அல்லது அடிப்படையாக இருக்கும் நிலை’ என்ற பொருளில் பெயர்ச்சொற்களோடு இணைந்து வரும் இடைச்சொல்.

  ‘சோதனைபூர்வமான முயற்சி’
  ‘அவர் என்னை மனப்பூர்வமாக ஆதரித்தார்’
  ‘அறிவுபூர்வமான அணுகுமுறை’
  ‘சட்டபூர்வமான நடவடிக்கை’