தமிழ் -மயம் யின் அர்த்தம்

-மயம்

இடைச்சொல்

  • 1

    ‘(முன் குறிப்பிடப்படுவது) நிறைந்திருக்கும் நிலை’, ‘(முன் குறிப்பிடப்படும்) ஒன்றாகவே இருத்தல்’, ‘(முன் குறிப்பிடப்படுவதைத் தவிர) வேறு எதுவும் இல்லை’ முதலிய பொருள் தரும் வகையில் பெயர்ச்சொற்களோடு இணைந்து வரும் இடைச்சொல்.

    ‘எங்கும் இருள்மயம்’
    ‘அவர் அன்புமயமாகவே காட்சியளித்தார்’
    ‘அவருடைய பேட்டி முழுவதும் குற்றச்சாட்டுமயமாக இருந்தது’