தமிழ் -மார் யின் அர்த்தம்

-மார்

இடைச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் உறவுப் பெயர்களுடனும் மதிப்பில் உயர்ந்தவர்களின் பெயர்களுடனும்) பன்மை விகுதியாகப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘தாய்மார்’
  ‘அண்ணன்மார்’
  ‘பாதிரிமார்’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஜாதிப்பெயர்களுடன்) பன்மையைக் காட்டும் இடைச்சொல்.

  ‘பிள்ளைமார்’