Ogl short stories comp bookmark tamil

ஆக்ஸ்போர்டு தமிழ் சிறுகதைப்போட்டி2018: முதல்இடம்

ஆக்ஸ்போர்டுதமிழ்2018 சிறுகதைப்போட்டி: தமிழை நான் நேசிக்கச் செய்த நிகழ்வு

சிறுகதைப்போட்டி2018, 10+ to 13 வயதுவரை,  முதல்இடம்: பி. ஹேமலதா

ம்ஆண்டுதமிழ்வாழும்அகராதியின்சிறுகதைப்போட்டி'தமிழைநேசிக்கச்செய்தநிகழ்வு''என்றதலைப்பைக்குறித்ததாகும்.

10 வயதிற்குமேல்13 வயதுவரைஉள்ளபங்கேற்பாளர்கள், தமிழ்மொழியின்வளமையையும், அழகையும்உணரச்செய்தநிஜவாழ்வில்நடந்தசம்பவத்தைப்பகிர்ந்துக்கொள்ளஅழைக்கப்பட்டனர்.

முதல்இடத்தைப்பிடித்துள்ளகீழ்க்கொடுக்கப்பட்டுள்ளக்கதை12 வயதுடையஅரசுமேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரியைச்சேர்ந்தபி. ஹேமலதா அவர்களால்எழுதப்பட்டது.

இந்தக்கதைபேச்சுமொழியில்எழுதப்பட்டுநிஜவாழ்வவைப்பிரதிபலிக்கும்வகையில்அமைந்துள்ளதால்மற்றகதைகளைவிடமாறுபட்டுநிலைநிற்கின்றது. மேலும், தமிழ்மொழியில்உறவுமுறைவார்த்தைகளின்முக்கியத்துவமும், மேன்மைகளும், தனிச்சிறப்புகளும்இக்கதையில்அழகாகவிவரிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டுதமிழ்வாழும்அகராதிக்குழுபி. ஹேமலதா அவர்களைஅவரதுசாதனைக்காகப்பாராட்டவிரும்புகிறது.


தமிழை நான் நேசிக்க செய்த நிகழ்வு

பி. ஹேமலதா

என் பெயர் பி.ஹேமலதா. நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். ஒரு நாள் என்னுடைய தாத்தாவோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அந்நேரம் எங்கள் வீட்டில் வேலை செய்யும் நடுத்தர வயதான பெண்மணி வந்தார். என் தாத்தா அந்த அம்மாவிடம் ஏம்மா இத்தனை நேரம் தாமதமாக வர்றீயே, எங்கப் போயிட்டு வர்ற என்றார்.

அந்த அம்மா அதற்கு ஒரு பதில் சொன்னாங்க, அந்த பதிலைக் கேட்டவுடன் எங்க தாத்தாவுக்கு பயங்கர கோபம். நான் ஏன் தாத்தா கோபப்படுறீங்க என்றேன். அதற்கு என் தாத்தா சொன்னார். அந்த அம்மா சொன்னதை நீ கவனீச்சியா, இல்லை தாத்தா, அந்த அம்மாவோடு பையன் ஒரு பதின்மப் பள்ளிக்கூடத்தில் [Matric school] படிக்கிறானாம்.

அந்தப் பையன் இந்த அம்மாவை, mummy-ன்னுக் கூப்பிடலையாம் அதுக்கு அந்த அம்மா அந்தப் பள்ளிகூடத்திற்குப் போய் தலைமையாசிரியரையும் வகுப்பாசிரியரையும் லெப்டு, ரைட்டு வாங்கிட்டு வந்ததாம். ஆமா தாத்தா அதுக்கு தலைமையாசிரியரை திட்டுறதால என்ன நடக்கப்போகுது.

அப்படி இல்லமா வருசத்திற்கு ரூ.40,000 பணம் செலவழிச்சு இங்கிலீசு மீடியத்துல சேர்த்தா அந்தப் பையன் இந்த அம்மாவை தமிழ்ல "அம்மா"- ன்னு கூப்பிடுறதுக்கா 40,000 பணம் கட்டறன்னாங்குது அந்த அம்மா.

சரி தாத்தா தமிழ்ல கூப்பிட்டா என்ன இங்கிலீசுலப் படிச்சு தம் பையன் 'டச்''புஷ்'-ன்னு பேசனாத்தானே எனக்குப் பெருமை அப்படிங்குறதே அந்த சொல்ல, சரி தாத்தா எந்த மொழியில் கூப்பிட்டா என்ன தாத்தா, அதுதான் தப்புமா?  தமிழ் மொழியில் 364 வார்த்தைகளில் மருத்துவ குணம் கொண்டதாக ஆய்வுகள் சொல்லுது. அதுல முதல் வார்த்தை 'அம்மா'அதுல உள்ள உண்மை நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களெல்லாம் தூய்மையாக்குதாம். அதனால் தான் பயன்படுத்தும் சொல் 'அம்மா'

வேற என்ன அற்புதம் இருக்குதுத் தாத்தா 'அப்பா'என்கிற சொல் 'அறிவையும்''உறவையும்'குறிக்கும் 'அண்ணன்', 'அக்காள்'என்னும் சொல் இரத்த உணர்வுகளை தூண்டச் செய்வது, 'தம்பி', 'தங்கை'கிளை உறவையும், மிகுந்தப் பாசத்தையும், 'அத்தை''மாமா', என்னும் சொல் அதி மிகுதியாக பாச உணர்வை காட்டக் கூடியது.        

இதனால் தான தமிழை எல்லோரும் "அமிழ்து"என்றும் "இனியது"என்றும் கொஞ்சுத்தமிழ், கெஞ்சுத்தமிழ், மிஞ்சுத்தமிழ், பழந்தமிழ், இனிமைத்தமிழ், தேன்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என இறைவனாலே அழைக்கப்பட்ட மொழி.

நம் மொழியில் இல்லாத சிறப்பு வேறந்த மொழியிலும் இல்லை. நம்மொழி நம் கண்கள் விழிப் போன்றது, ஒரு கண்களில் ஒளியிழந்தால் எப்படி பார்வையில் குறை வந்து நேருமோ! அதுப்போல் தான் மொழியானது. நம் முச்சுக்காற்றுக்கு நிகராக கருதமுடிகிறது.

என் தாத்தா சொல்லி முடித்தார் என் உடலெல்லாம் ஏதோ செய்தது. அப்போதே நான் முடிவுச் செய்தேன். தமிழ் என்னை நேசிக்கவும், வாசிக்கவும் வைத்தது.....!!! என்பதை என்னால் உணர முடிந்தது.        

தமிழ் என் உயிர் மூச்சு - நான் தமிழனாக வாழ்வதே பெருமையாக உள்ளது.

என் நாடு என்னுடைய தமிழ்நாடு என்பதனை பெருமிதம் கொள்கிறேன். அனைவரும் தமிழை நேசிப்போம்.

“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்"

“தமிழ் வளர்க! தமிழ் வாழ்க!”

தமிழ்! தமிழ்! தமிழ்!......!ஆக்ஸ்போர்டுதமிழ்2018 சிறுகதைப்போட்டி: மாயசக்திகள்கொண்டபூனை

சிறுகதைப்போட்டி2018, 8-10 வயதுவரை, முதல்இடம்: ஹிந்தேந்திரஆதித்யா

கீழேஉள்ளஇந்தக்கதை2018 ஆக்ஸ்போர்டுதமிழ்அகராதிசிறுகதைப்போட்டியில்முதல்இடத்தைப்பிடித்துள்ளது. இதில்பங்கேற்றவர்கள், 8 முதல்10 வயதிற்குஉட்பட்டவர்களும்,  'மாயசக்திகள்கொண்டபூனை''என்றதலைப்பைக்குறித்துதங்களதுகதையைசமர்ப்பிக்கவும்அழைக்கப்பட்டனர்.

இந்தக்கதைதேவிஅகாடெமிசீனியர்மேல்நிலைப்பள்ளி வளசரவாக்கம் சென்னையைச்சேர்ந்த8

வயதுடையஹிந்தேந்திரஆதித்யாஅவர்களால்எழுதப்பட்டது.

இந்தக்கதைஅதன்தனித்தன்மையால்நிலைநிற்கின்றது. சமர்ப்பிக்கப்பட்டமற்றகதைகளைப்போல்அல்லாமல், இந்தக்கதையில்அனைத்துகதாபாத்திரங்களும்பூனைகளாகஇருக்கின்றன. மேலும்இந்தக்கதைபூனைகளின்பார்வையில்இருந்துகூறப்பட்டுள்ளது. இந்தக்கதைதெளிவாகவும், ஏற்றசொற்களைப்பயன்படுத்தியும், எளிதில்புரிந்துகொள்ளும்படியாகவும்எழுதப்பட்டுள்ளது. முக்கியபாத்திரங்களின்பெயர்கள்அனைத்தும்இயைபுடையாதாகவும்(கிட்டு, பட்டுமற்றும்சிட்டு), கதைக்குபொருத்தமுள்ளதாகவும்உள்ளது. அனைத்துகதாபாத்திரங்களும்பூனைகளாகஇருந்தாலும், இந்தக்கதைநல்லதலைவரின்பண்புகளைவிவரிக்கின்றது, மேலும்நேர்மறையானசெய்தியைக்கொண்டுள்ளது.

ஆக்ஸ்போர்டுதமிழ்வாழும்அகராதிக்குழுஹிந்தேந்திரஆதித்யா அவர்களை அவரதுசாதனைக்காகப்பாராட்டவிரும்புகிறது.


மாய சக்திகள் கொண்ட பூனை

ஹிந்தேந்திர ஆதித்யா

          அது ஒரு பூனைகள் உலகம் அதில் அனைத்துப் பூனைகளும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. பூனைகள் சமுதாயத்திற்கு தலைவராக கிட்டுப் பூனை இருந்தது. கிட்டுப் பூனையானது தன் இனத்திடம் மிகவும் அன்பாகவும், வயதான பூனைகளிடம் மிகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளும்.

அந்த சமுதாயத்தில் பட்டு என்ற பூனையும், சிட்டு என்ற பூனையும் வாழ்ந்து வந்தன. ஊரில் அனைவரிடமும் அன்பாகவும், பாசமாகவும் பட்டுப் பூனை பழகும். ஆனால் சிட்டு என்ற பூனையோ யாரைக் கண்டாலும் எரிந்து விழும். எப்போதும் சிடுசிடுவென இருக்கும்.

பட்டுப் பூனை திடீரென காணவில்லை. நான்கு நாட்கள் கழித்து ஊருக்குள் வந்தது. பட்டுப் பூனை எப்போதும் போல் அனைவரிடமும் அன்பாகவும் அமைதியாகவும் இருந்தது. சிட்டுப் பூனையோ எல்லோரிடமும் வம்பிழுத்துக் கொண்டு, அனைவருடைய பொருட்களையும் திருடித்தின்று கொண்டும் இருந்தது. ஊரில் அனைவரிடமும் சிட்டுப் பூனைக்குக் கெட்ட பெயர். சிட்டுப் பூனைக்கோ பூனைகளின் சமுதாயத்திற்கு தலைவர் ஆக வேண்டும் என ஒரு ஆசை அதன் நெஞ்சின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருந்தது. அதற்கான சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தது.

ஒரு சமயம் பூனைகள் தலைவர் கிட்டுப் பூனை நகர் வலம் வந்து அனைவரும் நன்றாக இருக்கிறார்களா எனப் பார்த்துக் கொண்டே வந்தது. அப்போது சிட்டுப் பூனை அதனை நைசாகப் பேசி இருட்டான ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே சென்றவுடன் சிட்டுப் பூனை திடீரென மாயமாக மறைந்து விட்டது. அங்கே இருந்த சில நாய்கள் கிட்டுப் பூனையைச் சூழ்ந்து கொண்டு கடித்துக் குதறின.

எனவே கிட்டுப் பூனை உடல்நலம் இல்லாமல் இருந்தது. அது இறந்து போனால் தலைவர் பதவி தனக்குத் தான் என சந்தோஷமாக இருந்தது சிட்டுப் பூனை. அப்போதுதான் மறுபடியும் காணாமல் போயிருந்த பட்டுப் பூனை அங்கே வந்தது. அன்று முதல் கிட்டுவை அன்பாக கவனித்துக் கொண்டது. கடவுளிடம் பூசை செய்தது. பிறகு தன்னிடம் இருந்த மாய சக்தியைப் பயன்படுத்தி கிட்டுவின் உடலை நாவால் நக்கியது. கிட்டு திடீரென்று காயங்கள் மறைந்து எழுந்தது.

ஒரு முறை ஒரு குட்டிப் பூனைக்கு உடல்நலம் மோசமானது. அதையும் பட்டு தன் சக்தியால் காப்பாற்றியது. ஊரில் அனைவருக்கும் நல்லதையே செய்து வந்தது.

பட்டுவைக் கொல்லவும் சிட்டு நிறைய திட்டம் தீட்டியது. ஆனால் தன் மாய சக்தியால் பட்டு தப்பித்து கொண்டது. பட்டுவின் நல்ல ஒழுக்கங்களால் அதை தலைவர் ஆக்க பூனைகள் முடிவு செய்தன. பூனை உலகத்தின் தலைவராக பட்டு ஆனது.

பின் காட்டிற்கு சென்று தனக்கு மாய சக்திகள் கொடுத்த முனிவருக்கு நன்றி சொல்லியது. ஆசிகளும் பெற்றது.

நீதி:-

நல்ல ஒழுக்கம் இருந்தால் மட்டுமே பல பதவிகள் நம்மை தானாகத் தேடி வரும்.