Shortstorycompetition header

சிறுகதை போட்டி 2018

கதைகள் பிடிக்குமா? உங்கள் மொழியை நீங்கள் விரும்புகிறீர்களா?அப்படியானால், இதோ எங்கள் சிறுகதை போட்டி!


தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் சிறுகதை போட்டி


நீங்கள் சிறுகதை எழுதுவதில் ஆர்வமாக உள்ளவர்களா, ஆனால் அதை முயற்சி செய்ய சற்று தயங்குகிறீர்களா? அல்லது ஒருவேளை நீங்கள் பல வருடங்களாக எழுதியும், உங்கள் திறமையை யாருக்கும் காட்டவில்லையா? தமிழில் சிறுகதை எழுதவும், ஆன்லைனில் பிரசுரிக்கவும், சிறந்த பரிசை வெல்வதற்கும் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

ஆக்ஸ்போர்டு தமிழ் வாழும் அகராதி சிறுகதை போட்டியுடன் தமிழை சிறப்பிக்கிறது:
தங்கள் வயதின் அடிப்படையில், கீழ் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் ஒரு புனைக்கதை (500 சொற்களுக்கு மிகாமல்) எழுதி, கீழ்கண்ட ஈமெயில் முகவரிக்கு 30/6/2018 23.59 GMT-க்கு முன் அனுப்பவும்.

  • 8 முதல் 10 வயது வரை: "மாய சக்திகள் கொண்ட பூனை"
  • 10 வயதிற்கு மேல் 13 வயது வரை: "தமிழை நான் நேசிக்கச் செய்த நிகழ்வு"

தமிழ் மொழி வல்லுனர்கள் குழுவால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் இணையத்தளத்தில் 31/7/2018 அன்று வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்படும். வெற்றிபெற்ற கதை தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் வெற்றியாளருக்கு ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு சிறிய வியப்பூட்டும் பரிசு வழங்கப்படும்.

எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் சிந்தனை சிறகை விரித்து, எழுத துவங்குங்கள்!

கீழ் கொடுக்கப்பட்ட விவரங்களுடன் உங்கள் சிறுகதையை அனுப்பவும்: Tamilcommunity@oup.com

  • பெயர்:
  • முகவரி:
  • வயது:
  • தமிழில் கதையின் தலைப்பு:
  • வார்த்தைகளின் எண்ணிக்கை:

அல்லது, நீங்கள் உங்களது சிறுகதையை தபால் மூலம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்:

டாக்டர். சோபா லலிதா தேவி,
AU-KBC ஆராய்ச்சி மையம்,
எம்.ஐ.டி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம்,
குரோம்பேட்டை, சென்னை- 600 044

போட்டியில் பங்கேற்க விதிமுறைகள்

சமர்ப்பிக்க கடைசி தேதி: 30/6/2018 அன்று 23.59 GMT

சிறுகதையின் அளவு (வார்த்தைகளில்): அதிகபட்சம் 500 வார்த்தைகள். 500 -க்கும் மேற்பட்ட வார்த்தைகளை நீங்கள் அனுப்பினால், நாங்கள் முதல் 500 வார்த்தைகளை மட்டுமே கணக்கில் கொள்வோம். சிறுகதை உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். ஒரு நபருக்கு ஒரு இடுகை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிறுகதையின் அடிப்படைக்கருத்து:

  • 8 முதல் 10 வயது வரை: "மாய சக்திகள் கொண்ட பூனை"
  • 10 வயதிற்கு மேல் 13 வயது வரை: "தமிழை நான் நேசிக்கச் செய்த நிகழ்வு"

மேல் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு சிறுகதையை சமர்ப்பிக்கவும்.

நீதிபதிகள்: தமிழ் மொழி வல்லுனர்கள் கொண்ட குழுவால் போட்டி கண்காணிக்கப்படும். வெற்றிபெற்றவரின் பெயர் இணையத்தளத்தில் 31.7.2018 அன்று அறிவிக்கப்படும். வெற்றியாளர் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளப்படுவார்.

பரிசு: வெற்றிபெற்ற சிறுகதை தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் வலைத்தளத்தில் வெளியிடப்படும். வெற்றியாளருக்கு ஒரு சான்றிதழும் வியப்பூட்டும் ஒரு பரிசும் வழங்கப்படும்.


சிறுகதை போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்


இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும். இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியார்கள் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து ஏற்றுக்கொண்ட தாக கருதப்படுவீர்கள்.


  1. போட்டியில் சேர்வதற்கான கடைசி தேதி 30/6/2018 ஆகும். போட்டியாளர்களின் பதிவுகள் முடிவடையும் தேதியன்று 11.59 pm (GMT) மணிக்குள் வந்தடைய வேண்டும்.
  2. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸின்  ("OUP") ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தவிர, மேல் குறிப்பிடப்பட்டுள்ள வயதிற்குட்பட்ட தமிழ் மொழி பேசும் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
  3. போட்டியில் பங்கேற்க, பங்கேற்பாளர்கள் மேல் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு சிறுகதையுடன், தேவையான தகவல்களையும் கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
  4. ஒரு நபருக்கு ஒரே ஒரு இடுகை மட்டும் வழங்கப்படும். மின்னஞ்சல் அனுப்புவதால் மட்டும், OUP உங்கள் பதிவை பெற்றுள்ளது என்று கருதப்படமாட்டாது. இழப்பு, தாமதம் அல்லது சேதமடைந்த உள்ளீடுகளுக்கான பொறுப்பை OUP ஏற்காது. தாமதமான, முழுமையடையாத, தெளிவில்லாத, விதிமுறைகளுக்கு மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கி, சமர்ப்பிக்கப்படாத பதிவுகள் OUP-இன் விதிமுறைப்படி தகுதியற்றவைகளாக கருதப்படும்.
  5. ஒரே ஒரு வெற்றியாளருக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும்.
  6. நீதிபதிகளின் தீர்மானமே இறுதி முடிவாக கருதப்படும், வேறு யாருடைய கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  7. குறிப்பிட்ட நேரத்திற்குள், பரிசு பெறும் வெற்றியாளரை தொடர்புகொள்ள முடியாத நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளரின் பெயரை திரும்பப்பெற்று, போட்டிக்காக பெற்றுக்கொண்ட பதிவுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கம் உரிமை OUP-க்கு உள்ளது.
  8. இந்தப் பரிசு மாற்றத்தக்கதோ, திரும்பப்பெறக்கூடியதோ, முழுவதாக அல்லது பாதியாகவோ பணத்தொகையாக மாற்றப்படத்தக்கது அல்ல. OUP-க்கு மாற்று பரிசை வழங்குவதற்கான உரிமை உள்ளது. போட்டியில் பெற்றுக்கொண்ட பதிவுகள் திரும்ப அளிக்கப்படமாட்டாது.
  9. OUP போட்டியாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட, அவர்கள் வழங்கிய எந்த தகவலையும் சேகரித்து உபயோகப்படுத்தலாம். OUP இந்த தகவல்களை பரிசு பெறும் போட்டியாளரை தொடர்புக்கொள்ளவும், போட்டி சம்பந்தமான வினாக்களை கேட்பதற்கும், போட்டியாளர் விருப்பம் செலுத்தும் விளைப்பொருளை அல்லது சேவையை வழங்கவும் பயன்படுத்தலாம்.
  10. எதிர்பாராத சூழ்நிலை காரணமாக OUP-யால் போட்டியை நடத்த இயலாவிட்டால்,  எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் போட்டியை மாற்றியமைக்கவோ, திருத்தியமைக்கவோ, இடைநீக்கம் செய்யவோ அல்லது ரத்து செய்யவோ OUP-க்கு உரிமை உள்ளது.
  11. போட்டியில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதற்காகவோ அல்லது பங்குபெற்றும் பரிசை வெல்ல முடியாமல் போனதற்காகவோ யாருடைய மனது காயப்பட்டாலும் அல்லது ஏமாற்றமடைந்தாலும் அதற்கு OUP பொறுப்பேற்காது.  தொலைபேசி நெட்வொர்க் அல்லது இணைப்பு, கணினி ஆன்-லைன் அமைப்புகள், சர்வர்கள், வழங்குநர்கள், கணினி உபகரணங்கள், மென்பொருள், மின்னஞ்சல் தோல்வியடைதல் அல்லது வலைதளத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், தொலைபேசி இணைப்பு அல்லது வலைதளத்தில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மின்னஞ்சல் (பதிவை) பெற்றுக்கொள்ளாமல் போவதற்கு OUP பொறுப்பேற்காது. கவனக்குறைவு காரணமாக ஏற்படும் எந்தஒரு காயத்திற்கும் அல்லது மரணத்திற்கும் OUP பொறுப்பேற்காது.
  12. போட்டியின் இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இங்கிலாந்து சட்டத்தால் நிர்வகிக்கப்படும். இதுகுறித்த எந்த சர்ச்சைகளும் இங்கிலாந்து நீதிமன்றங்களின் பிரத்யேக அதிகாரத்துக்கு உட்பட்டது.


ஊக்குவிப்பவர்:
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், கிரேட் கிளாரென்டன் ஸ்ட்ரீட், ஆக்ஸ்போர்டு, ஆக்ஸ்போர்ட்ஷையர், OX2 6DP, யுனைட்டட் கிங்டம்


தனியுரிமைக் கைொள்மை


To participate in this competition in other languages, visit:
Hindi
Urdu
Setswana