உறுப்பினர் வழிகாட்டுதல்கள்

Oxford Dictionaries உறுப்பினர் வழிகாட்டுதல்கள்


டிஜிட்டல் மொழி வளங்களை உருவாக்குவதில் பங்குகொள்ளவும், உங்கள் பார்வைகளையும் கருத்துகளையும் சக மொழி ஆர்வலர்களிடம் பகிர்ந்துகொள்ளவும், உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெறவும் உதவும் இடமான Oxford Dictionaries-க்கு வரவேற்கின்றோம்.

Oxford Dictionaries பற்றிய அறிமுகம்
உங்கள் மொழிக்காக இணையவழி நிகழ்கால அகராதியை உருவாக்க புதிய உள்ளீடுகளையும் மொழிபெயர்ப்புகளையும் சமர்ப்பிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். சொற்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்கலாம், பதிவிடப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கலாம். மொழி மற்றும் சொற்களைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பற்றி விவாதிக்கலாம், மற்றவர்களிடம் அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம்.

மொழி மேலாளர்தான் சமூக நிர்வாகியும் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நபரும் ஆவார். மொழி வளங்களின் வளர்ச்சியை ஆதரிக்கவும், அனைத்து பங்களிப்புகளும், கருத்துகளும் இங்கே குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க இருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டியது அவர்களின் பணியாகும். 


Oxford Dictionaries தளத்தில் கிடைக்கும் உள்ளடக்கம் மற்றும் சேவைகள் தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும் மொழி மேலாளரால் பதிலளிக்க இயலாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். Oxford Dictionaries தயாரிப்பு அல்லது சந்தா தொடர்பாக ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது எங்கள் அகராதி உள்ளீடுகளைப் பற்றிய விசாரணை இருந்தால், உதவி பக்கங்களைப் (கவனத்திற்கு: இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் இருக்கும்) பார்க்கவும். 


oxforddictionaries.com (“இணையதளம்”) என்ற இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த வழிகாட்டுதல்களுடன், பொதுவான தரவுப் பாதுகாப்பு விதிமுறைகள், பயனர் உருவாக்கிய ஆவணங்களைப் பயன்படுத்துவதற்கு Oxford University Press-க்கு இருக்கும் உரிமைகள் மற்றும் தளத்தைச் சரியாகப் பயன்படுத்துவது தொடர்பானவற்றை விவரிக்கும் எங்கள் தனியுரிமைக் கைொள்மை மற்றும் சட்ட அறிவிப்பையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த ஆவணத்தை வேறொரு மொழியில் பெற விரும்பினால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.


நடத்தை

அனைவரும் இந்தத் திட்டத்தில் பங்குகொள்வதை வரவேற்கின்றோம். இணைய தளத்தில் பின்வரும் நடத்தைகள் எந்த வகையான இடுகை, கருத்து அல்லது பங்கேற்பிலும் ஏற்றுக்கொள்ளப்படாது: 

 • இணையதளத்தின் (மற்றும் அதன் துணைக் களங்கள்) பிற உறுப்பினர்கள் அல்லது பார்வையாளர்களுக்கு ஆக்ரோஷமானதாக அல்லது தவறாகத் தோன்றும் எந்தவொரு நடத்தையும்
 • கொச்சையான அல்லது தாக்குதல் பாணி மொழியைப் பயன்படுத்துதல் (அத்தகைய மொழி பற்றிய அறிவார்ந்த விவாதச் சூழல் தவிர). 
 • வணிக ரீதியான தன்மை கொண்ட, விளம்பரம், விளம்பரச் சலுகை அல்லது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல் பற்றிய எந்தவொரு இடுகைகளும் (அது வேறொரு உறுப்பினரால் பிரத்யேகமாகக் கோரப்பட்டிருந்தால் தவிர). 
 • நையாண்டி செய்தல் (“வேண்டுமென்றே ஒருவரின் ஆன்லைன் இடுகையை தொடர்பாகக் கோபப்படுத்தி அல்லது அவர்களிடமிருந்து கோபமான பதிலைப் பெறும் நோக்கத்துடன் ஒருவரைத் தாக்கி கேலி செய்வது அல்லது ஆத்திரமூட்டுவது”). 
 • மொழி மற்றும் சொற்களுடன் தொடர்பில்லாத தலைப்புகள். 
 • சட்டவிரோதமான, அச்சுறுத்தும், தொந்தரவு செய்யும், பாவமாகக் கருதும், தீங்குதரும், மோசமான, ஆபாசமான, அபத்தமான, ஏமாற்றும், மோசடியான, வெளிப்படையான அல்லது கிராஃபிக் விளக்கங்கள் அல்லது நோக்கத்தைக் கொண்ட பாலியல் தொடர்பான செயல்கள் (தனிநபர்கள் அல்லது தனிநபர்களின் குழுவால் மேற்கொள்ளப்படும் வன்முறை அல்லது அச்சுறுத்தும் இயல்பை உள்ளடக்கிய பாலியல் மொழி உட்பட ஆனால் வரம்பில்லாமல்), மற்றொருவரின் தனியுரிமையைப் பாதிக்கும் அல்லது வெறுப்பூட்டும் ஆவணங்கள். 
 • கிரிமினல் குற்றத்திற்கு உடந்தையாகும் அல்லது சிவில் தண்டனைப் பொறுப்புக்கு வழிவகுக்கும் செயல்பாடுகளைக் கொண்ட அல்லது அவற்றை ஊக்குவிக்கும் ஆவணங்கள். 
 • வைரஸ், ஸ்பைவேர் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் கூறுகள், எந்த வகையான விளம்பர நோக்கம் கொண்ட அல்லது தோற்றம் அல்லது செயல் அறிக்கைகளைத் தவறாகக் காட்டும் அல்லது தவறாக வழிநடத்தும் ஆவணங்கள். 
 • வேண்டுமென்றே பதிவுசெய்யப்பட்ட தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்கள். 
 • தனிநபர் உரிமை அல்லது அறிவுசார் சொத்து உரிமையாளரிடமிருந்து முதலில் அனுமதி பெறாமல் பதிப்புரிமை அல்லது பிற உரிமையுடைய அல்லது அறிவுசார் சொத்துரிமை மூலம் பாதுகாக்கப்படும் ஆவணங்கள். 
 • உங்களுடைய கருத்துகளில் உங்களைப் பற்றிய அல்லது மற்றவர்களைப் பற்றிய எந்தவொரு முக்கியமான, தனிப்பட்ட, தனிநபர் உரிமை சார்ந்த அல்லது இரகசியமான தகவல்கள் எதுவும் இருக்கக்கூடாது. 


மதிப்பீடு

இந்த வழிகாட்டுதல்களை ஏதாவது மீறுகிறதா என்று இணைய தளத்தில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கண்காணிக்கும் உரிமையைக் கொண்டுள்ளோம்; இதன் விளைவாக, சில இடுகைகள் வெளியிடப்படுவதற்கு முன் மதிப்பீடு செய்யப்படுவதற்கு அனுப்பிவைக்கப்படலாம், அதனால் அந்த இடுகை இணையதளத்தில் தோன்றுவதில் தாமதம் ஏற்படலாம். 


இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத எந்தவொரு பயனரையும் எச்சரிக்கையோ அல்லது விவாதமோ இல்லாமல் தடுக்கும், முந்தைய இடுகைகள் மற்றும் பங்களிப்புகள் அனைத்தையும் அகற்றும் உரிமையைக் கொண்டுள்ளோம். 


துல்லியம் மற்றும் நேர்மை

உங்கள் சுயவிவரத்தில் உங்களைத் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக, உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவருடனும் தங்கள் அசல் பெயரைப் பயன்படுத்தித் தொடர்புகொள்ள வேண்டும் என்பது Oxford Dictionaries கொள்கையாகும். 

பயனர்களால் பதிவிடப்படும் உள்ளடக்கம் ஆரம்பத்தில் ‘பயனர் பங்களிப்புகளாகத்’ தோன்றும், அதனைத் தொடர்ந்து அது Oxford Dictionaries பயனர்களால் அல்லது OUP மூலம் நிறுவனத்தினுள் சரிபார்க்கப்பட்டுப் புதுப்பிக்கப்படும்.