தமிழ் உடைமை யின் அர்த்தம்

உடைமை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு) உரிமை உடைய வீடு, நிலம், பொருள்கள் போன்ற சொத்து.

    ‘விபத்து நடந்த இடத்தில் கிடந்த உடைமைகள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டன’
    ‘போர்க் காலத்தில் நாட்டின் எல்லைகளில் வசிப்பவர்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு வேறு இடங்களைத் தேடிச் செல்கிறார்கள்’
    ‘என்னுடைய உடைமை என்று சொல்லிக்கொள்ள இந்த வீடு மட்டும்தான் இருக்கிறது’