தமிழ் ஊகம் யின் அர்த்தம்

ஊகம்

பெயர்ச்சொல்

 • 1

  (தெரிந்த தகவல்களைக் கொண்டு மட்டும் செய்யும்) உத்தேசமான கணிப்பு.

  ‘அவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும் என்பது என் ஊகம்’
  ‘ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் ஆராய்ச்சியில் இடம் இல்லை’

 • 2

  சந்தை நிலவரத்தை ஒட்டிப் பெறக்கூடிய லாபத்தைப் பற்றிய அனுமானம்.

  ‘ஊக வணிகம்’
  ‘ஊக பேரம்’
  ‘ஊக வணிகர்’