தமிழ் ஏதாவது யின் அர்த்தம்

ஏதாவது

பெயர்ச்சொல்

 • 1

  எந்த ஒன்றாவது.

  ‘கடைக்குப் போகிறேன். ஏதாவது உங்களுக்கு வேண்டுமா?’
  ‘வீட்டில் சும்மா இருக்க மாட்டான். ஏதாவது செய்துகொண்டே இருப்பான்’

 • 2

  குறிப்பிட்ட சூழலில் சுட்டப்பட்டது அல்லது சுட்டப்பட்டதைப் போன்ற ஒன்று.

  ‘காயம் ஏதாவது பட்டதா?’
  ‘உன்னிடம் பணம் ஏதாவது இருக்குமா?’

 • 3

  இப்படிப்பட்டது அல்லது இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லாதது.

  ‘சிறு விஷயங்கள்கூட ஏதாவது ஒரு விதத்தில் உபயோகப்படும்’
  ‘ஏதாவது ஒரு பேருந்தைப் பிடித்து வீட்டுக்கு வந்துவிடு’