தமிழ் ஒற்று யின் அர்த்தம்

ஒற்று

வினைச்சொல்ஒற்ற, ஒற்றி

 • 1

  (நீர், வியர்வை முதலியவற்றைத் துணி முதலியவை கொண்டு மென்மையாக) உறிஞ்சச்செய்தல்.

  ‘சிந்திய மையை உறிஞ்சுதாளால் ஒற்றியெடுத்தான்’
  ‘வியர்வையைச் சேலைத் தலைப்பால் ஒற்றிக்கொண்டாள்’

 • 2

  (உயர்வானதை, அழகானதைப் போற்றும் விதத்திலும் பிரியத்தைக் காட்டும் விதத்திலும் கையால் தொட்டு அல்லது கையில் வைத்துக் கண்களில், உதட்டில்) மென்மையாக வைத்தெடுத்தல்.

  ‘பெற்றோரின் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்’
  ‘அர்ச்சகர் தந்த பூவை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கூடையில் வைத்தாள்’
  ‘குழந்தையைத் தொட்டு விரலை உதட்டில் ஒற்றிக்கொண்டாள்’

 • 3

  (சில ஒலிகளின் உச்சரிப்புக்காக நாக்கு அண்ணத்தை) மென்மையாகத் தொடுதல்.

  ‘‘ட’ வை ஒலிக்க நாக்கின் நுனி அண்ணத்தை ஒற்றி வருட வேண்டும்’

தமிழ் ஒற்று யின் அர்த்தம்

ஒற்று

பெயர்ச்சொல்

 • 1

  உளவு.

  ‘ஒற்று வேலை’

தமிழ் ஒற்று யின் அர்த்தம்

ஒற்று

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  (சந்தி விதியைக் கூறும்போது) மெய்யெழுத்து.

  ‘நான்காம் வேற்றுமைக்குப் பிறகு ஒற்று மிகும்’