தமிழ் கைவேலை யின் அர்த்தம்

கைவேலை

பெயர்ச்சொல்

 • 1

  (அலங்காரத்திற்காக) துணிகளில் வண்ண நூல் கொண்டு தைத்தல், பொம்மை செய்தல் போன்ற வேலை.

  ‘பெண்ணுக்குக் கைவேலையெல்லாம் தெரியும்’
  ‘வீட்டில் இருந்தபடி கைவேலை செய்து கொஞ்சம் சம்பாதிக்கிறேன்’

 • 2

  குறிப்பிட்ட நேரத்தில் செய்துகொண்டிருக்கும் வேலை.

  ‘குழந்தை அழுவதைக் கேட்டதும் கைவேலையை விட்டுவிட்டு ஓடினாள்’
  ‘கைவேலையாக இருக்கிறேன், பிறகு வா!’
  ‘தகவல் தெரிந்ததும் அவரவர் தங்கள் கைவேலையைப் போட்டது போட்டபடியே குளத்தை நோக்கி ஓடத் தொடங்கினார்கள்’