தமிழ் சத்தம் யின் அர்த்தம்

சத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பொருள்கள், உயிரினங்கள் ஆகியவற்றின் அசைவாலோ மற்ற செயல்களாலோ எழும் ஒழுங்கற்ற ஒலி.

  ‘பக்கத்து அறையில் யாரோ அழும் சத்தம் கேட்கிறது!’
  ‘பேருந்து கிளம்பும் சத்தம் கேட்டது’
  ‘ஒலிபெருக்கியிலிருந்து வந்த பாட்டுச் சத்தம் காதைப் பிளந்தது’
  ‘அவருடைய குறட்டைச் சத்தத்தைத் தாங்க முடியவில்லை’
  ‘கூரையில் எலி ஓடும் சத்தம் கேட்டது’
  ‘குழந்தைகள் விளையாடும் சத்தத்தில் விழித்துக்கொண்டேன்’
  ‘பக்கத்து வீட்டில் பேச்சுச் சத்தம் கேட்டது’

 • 2

  (பொதுவாகப் பேச்சு, பாட்டு போன்றவற்றைக் குறித்து வரும்போது) இயல்பான அல்லது சராசரியான அளவைவிட உரத்துக் கேட்கும் ஒலி.

  ‘சத்தமாகப் பேசினால்தான் அவருக்குக் கேட்கும்’
  ‘அந்த வீட்டுக்குள் என்ன ஒரே சத்தமாக இருக்கிறது?’
  ‘பையன் சத்தமாகப் பாடம் படித்துக்கொண்டிருந்தான்’
  ‘கிழவியின் சத்தமான ஒப்பாரி நெஞ்சைப் பிசைந்தது’
  ‘வானொலியை இவ்வளவு சத்தமாகவா வைப்பது?’

தமிழ் சத்தம் யின் அர்த்தம்

சத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (வண்டிக்குத் தரும்) வாடகை; கூலி.

  ‘வண்டிச் சத்தத்தைக் கொடுத்து அனுப்பு!’