தமிழ் லேசு யின் அர்த்தம்

லேசு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு கனமற்றது.

  ‘தக்கை லேசாக இருப்பதால் நீரில் மிதக்கிறது’
  ‘லேசான பந்து’

 • 2

  பேச்சு வழக்கு எளிது; சுலபம்.

  ‘அவனிடமிருந்து லேசில் பணம் வாங்கிவிட முடியாது’
  ‘என்னால் அசைக்கக்கூட முடியாத மூட்டையை அவன் லேசாகத் தூக்கிவிட்டான்’
  ‘நீ நினைப்பதுபோல் அது லேசான வேலையல்ல’

 • 3

  பேச்சு வழக்கு குறைவான விசை.

  ‘லேசாகத் தட்டினாலே விழுந்துவிடுவாய்போல இருக்கிறாயே’
  ‘வேகமாக வீசப்பட்ட பந்தை லேசாகத் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் எடுப்பதற்காக தோனி ஓடினார்’