தமிழ் அகப்படு யின் அர்த்தம்

அகப்படு

வினைச்சொல்அகப்பட, அகப்பட்டு

 • 1

  பிடிபடுதல்; சிக்குதல்; மாட்டுதல்.

  ‘திருடன் கையும்களவுமாக அகப்பட்டுக்கொண்டான்’
  ‘வண்டிச் சக்கரத்தின் கீழ் அகப்பட்டு அவள் நசுங்க இருந்தாள்’
  ‘கொலை வழக்கில் என் தம்பி அகப்பட்டுக்கொண்டு தவிக்கிறான்’

 • 2

  (தன்னிச்சையாக அல்லது தானாக வருவதுபோல) கிட்டுதல்; கிடைத்தல்.

  ‘பைக்குள் கை விட்டு அகப்பட்ட சில்லறையை எடுத்துப் பிச்சைக்காரிக்குப் போட்டான்’
  ‘பேச்சுத் துணைக்கு ஒருவர் அகப்பட்டார்’

 • 3

  (மறைவாக இருந்தது அல்லது மறைத்துவைக்கப்பட்டிருந்தது) கிடைத்தல்.

  ‘கிணறு தோண்டிய இடத்தில் சிலை அகப்பட்டது’
  ‘காவல்துறையினர் அந்த வீட்டைச் சோதனையிட்டபோது நிறைய திருட்டுச் சாமான்கள் அகப்பட்டன’