தமிழ் அகம் யின் அர்த்தம்

அகம்

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது; உள்பகுதி.

  ‘வீட்டின் அகத்தையும் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்’

 • 2

  மனம்; உள்ளம்.

  ‘புறத் தூய்மையைப் போலவே அகத் தூய்மையும் முக்கியம்’

 • 3

  காதலைப் பற்றிக் கூறும் தமிழ் இலக்கியப் பொருள் பாகுபாடு.

  ‘பழைய தமிழ் இலக்கணங்கள் அகப்பொருளையும் புறப்பொருளையும் விரிவாகக் கூறுகின்றன’
  ‘நானூறு அகப்பாடல்கள் கொண்டது அகநானூறு’