தமிழ் அகராதி யின் அர்த்தம்

அகராதி

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு மொழியில் அல்லது ஒரு துறையில் பொருளுடைய சொற்களை அல்லது குறியீடுகளை வரிசைப்படுத்திப் பொருள் தரும் நூல்.

  ‘சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை என்றால் அகராதியை நாடுகிறோம்’
  ‘இந்த அகராதியில் இலக்கணக் குறிப்பு, எடுத்துக்காட்டு வாக்கியங்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன’
  ‘இயற்பியல் கலைச்சொல் அகராதி’

 • 2

  (‘அகராதியில்’ என்ற வடிவத்தில் மட்டும்) (பெரும்பாலும் எதிர்மறையில்) இயல்பு.

  ‘தோல்வி என்பது என் அகராதியில் கிடையாது’
  ‘இரவில் கண்விழிப்பது என்பதே அவள் அகராதியில் கிடையாது’
  ‘அலுவலகத்துக்குத் தாமதமாக வருவது என்பது அவன் அகராதியில் இல்லாத ஒன்று’
  ‘நன்றி என்பது அவர் அகராதியில் இல்லை’