தமிழ் அகற்று யின் அர்த்தம்

அகற்று

வினைச்சொல்அகற்ற, அகற்றி

 • 1

  நீக்குதல்; இல்லாதபடி ஆக்குதல்.

  ‘குளத்தில் வெங்காயத்தாமரையை அகற்றிய பின் மீன் பிடிக்கலாம்’
  ‘காயத்தின் மேல் இருந்த பஞ்சை அகற்றி மருந்து போட்டார்’
  ‘வறுமையை அகற்றப் பல திட்டங்கள்’

 • 2

  அப்புறப்படுத்துதல்; வெளியேற்றுதல்.

  ‘சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் காவல்துறையினரால் அகற்றப்பட்டனர்’
  ‘தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அவையிலிருந்து அகற்றப்பட்டனர்’
  ‘தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீரை அகற்றத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’