அகல -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அகல1அகல்2அகல்3

அகல1

வினையடை

 • 1

  (கண், வாய் அல்லது கதவு, ஜன்னல் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பெரிதாக; நன்றாக விரிந்து இருக்கும்படி.

  ‘ஆச்சரியத்தால் கண்களை அகல விரித்தாள்’
  ‘கதவை அகலத் திறந்துவை’

 • 2

  (கையை அல்லது காலைக் குறிப்பிடும்போது) பக்கவாட்டில்.

  ‘கைகளை அகலப் பரப்பி மல்லாந்து படுத்திருந்தான்’

அகல -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அகல1அகல்2அகல்3

அகல்2

வினைச்சொல்

 • 1

  குறிப்பிட்ட இடத்திலிருந்து நகர்தல்; (திரை முதலியன) விலகுதல்.

  ‘நின்றுகொண்டிருந்தவர் திடீரென்று அங்கிருந்து அகன்றார்’
  ‘திரை அகன்றதும் காட்சி தொடங்கியது’

 • 2

  (உணர்ச்சி, நினைவு அல்லது நோய், வலி போன்றவை) நீங்குதல்.

  ‘சென்ற ஆண்டு வீசிய புயல் இன்னும் மக்கள் நினைவிலிருந்து அகலவில்லை’
  ‘முகத்தில் முன்பு இருந்த சிரிப்பும் மலர்ச்சியும் அகன்றுவிட்டிருந்தன’
  ‘மனத்திலிருந்து அச்சம் அகன்றது’
  ‘நம்மை விட்டுத் தாழ்வு மனப்பான்மை அகன்றால்தான் முன்னேறுவோம்’
  ‘பலவிதமான வயிற்று உபாதைகள் அகல வேம்பைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர்’

 • 3

  விரிதல்.

  ‘மூச்சை இழுக்கும்போது மார்பு அகன்று, வெளியே விடும்போது சுருங்குகிறது’

அகல -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அகல1அகல்2அகல்3

அகல்3

பெயர்ச்சொல்

 • 1

  (மண் அல்லது உலோகத்தில் செய்யப்பட்ட) எண்ணெயும் திரியும் இட்டு ஏற்றப்படும், குழிவு அதிகம் இல்லாத விளக்கு.

  ‘கார்த்திகைதோறும் வீடுகளில் வரிசையாக அகல் விளக்கு ஏற்றிவைப்பார்கள்’