தமிழ் அச்சு யின் அர்த்தம்
அச்சு
பெயர்ச்சொல்
- 1
(நூல் முதலியன) அச்சிடுவதற்கான (பெரும்பாலும் உலோகத்தால் செய்த) எழுத்து, எண் முதலியன.
‘அச்சகத்துக்குப் புதிய அச்சுகள் வாங்கப்பட்டன’ - 2
அச்சிடுதல்.
‘அச்சுக்குக் கொடுப்பதற்கு முன் திருத்தங்கள் செய்துவிடு’ - 3
அச்சிடப்பட்ட வடிவம்/அச்சிடப்பட்ட முறை.
‘கதையை அச்சில் படிக்கும்போது வேறு மாதிரி எழுதியிருக்கலாம் என்று தோன்றும்’‘அச்சு அழகாக இருக்கிறது’ - 4
(‘அச்சில்’ என்ற வடிவம் மட்டும்) அச்சிடப்படும் நிலை/அச்சிடப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கும் நிலை.
‘இவருடைய அடுத்த நாவல் அச்சில் இருக்கிறது. அடுத்த மாதம் வெளியாகும்’‘என்னுடைய நூல்களில் பாதிக்கு மேல் அச்சில் இல்லை’ - 5
(பொருள்களை ஒன்றுபோல் தயாரிப்பதற்கான) வார்ப்படம்.
‘அச்சில் வார்த்துச் செய்த வெண்கலச் சிலைகள்’ - 6
தோற்றத்தில் ஒத்த தன்மை; சாயல்.
‘தாயும் மகளும் ஒரே அச்சு’ - 7
குழல் போன்ற பகுதியின் அடியில் பொருந்தக்கூடிய துளையிட்ட தகட்டை உடையதும் அந்தப் பகுதியினுள் அடைத்த மாவை ஒரே சீராகப் பிழிவதற்குக் கட்டையை அல்லது உலோகத் தண்டை உடையதுமான சாதனம்/அந்தச் சாதனத்தின் அடியில் பொருத்தும், துளையிட்ட வட்ட வடிவத் தகடு.
தமிழ் அச்சு யின் அர்த்தம்
அச்சு
பெயர்ச்சொல்
- 1
வாகனத்தின் இரு சக்கரங்களின் மையத்தில் செல்லும் இரும்புத் தண்டு.
- 2
(தறியில்) பாவு செல்வதற்கு மட்டும் இடைவெளி கொண்டதாக அமைக்கப்பட்ட, மெல்லிய கம்பிகளின் நெருக்கமான தொகுப்பு.
- 3
கணிதம்
வரைபடத்தில் கிடைமட்டமாகவோ செங்குத்தாகவோ இருக்கும் கோடு.‘மாதங்களைப் படுகிடை அச்சிலும் மழையின் அளவுகளைச் செங்குத்து அச்சிலும் குறிக்கவும்’ - 4
உருண்டை வடிவத்தில் இருக்கும் கோள் போன்றவற்றின் நடுவில் செல்வதாகக் கொள்ளப்படும் கற்பனைக்கோடு.
‘பூமியைப் போல செவ்வாய் கிரகத்தின் அச்சும் சாய்வாக அமைந்திருக்கிறது’ - 5
உயிரியல்
மலரின் மையமாகவும் அதனை இரண்டாகப் பிரிப்பதாகவும் கொள்ளப்படும் கற்பனைக் கோடு.