தமிழ் அசர் யின் அர்த்தம்

அசர்

வினைச்சொல்அசர, அசந்து

 • 1

  வியப்படைதல்.

  ‘அந்த முதியவரின் கணீரென்ற குரலைக் கேட்டு அசந்துபோனேன்’
  ‘அசரவைக்கும் அழகு’

 • 2

  கவனக்குறைவாக இருத்தல்.

  ‘நாம் கொஞ்சம் அசந்தால் அவன் நம்மை ஏமாற்றிவிடுவான்’

 • 3

  அயர்தல்; களைப்படைதல்.

  ‘வேலை செய்து கைகால்கள் அசந்துவிட்டன’
  ‘அவன் நல்ல உழைப்பாளி. அசராமல் வேலை செய்வான்’