தமிழ் அசாத்தியம் யின் அர்த்தம்

அசாத்தியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தன்மையைக் குறிக்கும்போது) அளவுக்கு அதிகமானது; மிகுதி.

  ‘அவனுக்கு அசாத்தியத் தன்னம்பிக்கை’
  ‘அசாத்தியமாகக் கோபம் வருகிறது’
  ‘இது அசாத்தியமான கற்பனை’

 • 2

  சாத்தியம் அல்லாதது; இயலாதது.

  ‘பத்து நாளைக்குள் இந்த வேலையைச் செய்துமுடிப்பது அசாத்தியமான காரியம்’