தமிழ் அசிங்கப்படு யின் அர்த்தம்

அசிங்கப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒருவர்) அவமானத்துக்கு உள்ளாதல்.

    ‘இவ்வளவு படித்தவர் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டுவிட்டாரே’
    ‘‘இந்த உடையில் கல்யாணத்துக்கு வந்து என்னால் அசிங்கப்பட முடியாது’ என்று என் மகன் குதித்தான்’