தமிழ் அசிங்கம் யின் அர்த்தம்

அசிங்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தரக்குறைவு; மட்டம்; ஆபாசம்.

  ‘அவன் குறையைச் சுட்டிக்காட்டி அசிங்கமாகக் கேலி செய்தார்’
  ‘கலைப் படைப்புகளில் நிர்வாணம் அசிங்கமாகக் கருதப்படுவது இல்லை’

 • 2

  அழகற்றது.

  ‘வீடு குப்பையும் கூளமுமாகப் பார்க்க அசிங்கமாக இருந்தது’
  ‘அழுக்குத் தலையும், அழுக்கு உடைகளுமாக ஆள் பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தான்’

 • 3

  அவமானம் தரத்தக்கது; கேவலமானது.

  ‘வரதட்சணை கேட்பது மிகவும் அசிங்கமானது’

 • 4

  (அருவருப்பு ஏற்படுத்தும்) கழிவு.

  ‘அசிங்கம் கிடக்கிறது, பார்த்து வா’