தமிழ் அஞ்சல் யின் அர்த்தம்

அஞ்சல்

பெயர்ச்சொல்

 • 1

  ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பிவைக்கும் (அரசு நிர்வகிக்கும் அமைப்பு) முறை.

  ‘அஞ்சல் துறை’
  ‘அஞ்சல் ஊழியர்’
  ‘இந்த நூலை அஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்’

 • 2

  ஒருவர் பெறும் கடிதம் முதலியன.

  ‘ஏதேனும் அஞ்சல் வந்ததா?’

 • 3

  குறிப்பிட்ட அஞ்சல் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஊர் என்பதைக் குறிக்கும் முறையில் முகவரியில் தரப்படும் சொல்.

  ‘சங்கரன், புது எண்: 35, பொருள்வைத்தசேரி, சிக்கல் அஞ்சல், நாகப்பட்டினம் மாவட்டம் என்ற முகவரியிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது’

 • 4

  (வானொலியிலும் தொலைக்காட்சியிலும்) ஒரு நிகழ்ச்சி ஒரு நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்பட்டோ அல்லது ஒளிபரப்பப்பட்டோ மற்ற நிலையங்களால் பெறப்படும் முறை.

  ‘செய்திகள் சென்னையிலிருந்து அஞ்சல் ஆகும்’