தமிழ் அடக்கம் யின் அர்த்தம்
அடக்கம்
பெயர்ச்சொல்
- 1
தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை; பணிவு.
‘அவர் அதிகம் பேசாத அடக்கமான பேர்வழி’‘அவர் சொன்னதை அடக்கமாகக் கேட்டுக்கொண்டான்’‘ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் அடக்கமாக இருக்கிறார்’ - 2
வெளியே தெரியாதபடி உள்ளடங்கி அமைந்திருத்தல்.
‘வீட்டுக்குள் இப்படி ஒரு அடக்கமான கட்டு இருப்பது பலருக்குத் தெரிந்திருக்காது’ - 3
அளவில் சிறியது; பயன்படுத்துவதற்கு வசதியானது.
‘தீப்பெட்டி மாதிரி அடக்கமான வீடு’ - 4
உட்படுதல்.
‘எல்லாச் செலவும் இதில் அடக்கம்’ - 5
பிணத்தைப் புதைக்கும் சடங்கு.
‘அம்மாவின் அடக்கம் நடந்து முடிந்த பிறகுதான் தம்பி ஊரிலிருந்து வந்து சேர்ந்தான்’ - 6
அடக்க விலை.
‘அடக்கமே எனக்கு எழுபது ரூபாய் ஆகிறது. அதற்கும் குறைத்து நான் விற்க முடியுமா?’