தமிழ் அடர் யின் அர்த்தம்

அடர்

வினைச்சொல்அடர்ந்து

 • 1

  இடைவெளி இல்லாமல் செறிந்திருத்தல்; மண்டுதல்.

  ‘சப்பாத்திப் புதர் அடர்ந்து வளர்ந்திருக்கிறது’
  ‘மார்பில் புசுபுசுவென்று ரோமம் அடர்ந்திருந்தது’

தமிழ் அடர் யின் அர்த்தம்

அடர்

பெயரடை

வேதியியல்
 • 1

  வேதியியல்
  (அமிலத்தைக் குறிக்கையில்) மிகவும் குறைந்த அளவில் நீர்த்தன்மை கொண்டதும் வீரியம் மிக்கதுமான.

  ‘அடர் கந்தக அமிலம்’

 • 2

  வேதியியல்
  (நிறத்தைக் குறிப்பிடும்போது) அடர்த்தியாக உள்ள.

  ‘அடர் நீல நிறம்’
  ‘அடர் பச்சை நிறக் கல்’